ஹம்பாந்தொட்டை மாகம்புர துறைமுக பணியாளர்களின் தொழில் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்று பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலமைச்சர் டபிள்யூ. டி.ஜே செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
துறைமுக நிர்வாக அதிகாரி மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் பேச்சுவார்தை மேற்கொண்டு வெகுவிரைவில் தீர்வு பெற்று கொடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.
அரச கொள்கைக்கு அமைவாக ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது பணியாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானம் குறித்து தொழில் ஆணையாளரின் ஆலோசனையோ அல்லது பரிந்துரையோ பெற்று கொள்ளப்படவில்லை என தொழிலமைச்சர் டபிள்யூ டி.ஜே செனவிரத்ன தெரிவித்துள்ளார்.