போர் விமானங்களில் முதல்முறையாக 3 பெண் விமானிகள்!

25654 0

இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்களையும் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதனைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 6 பெண் விமானிகளில் பாவனா காந்த், அவனி சதுர்வேதி, மோகனா சிங் ஆகிய 3 பேர் வெற்றிகரமாக தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு அவர்கள் மூவரும் போர் விமானங்களில் பணியாற்றும் பொறுப்பில் இணைக்கப்பட்டு, கடினமான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் மூவரும் வருகின்ற டிசம்பர் மாதம் போர் விமான விமானிகளாக முறைப்படி நியமனம் செய்யப்பட்டு பணியைத் ஆரம்பிக்க உள்ளனர்.

இதற்கான அறிவிப்பை இந்திய விமானப்படையின் தளபதி பி.எஸ்.தனோயா டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டார்.

போர் விமானிகளாக பெண்கள் பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a comment