ஐ.ஓ.சி. விலையை அதிகரித்தால், அரசாங்கம் தலையிடும்- அர்ஜுன

301 0

ஐ.ஓ.சி. நிறுவனம் இந்த நாட்டிற்குள் வந்து அவர்களுக்கு தேவையான விதத்தில் செயற்பட  இடமளிக்க முடியாதெனவும், இந்த நாட்டில் அரசாங்கமொன்று இருக்கின்றது எனவும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

பெற்றோல் விலைக்கு சூத்திரமொன்றை நாம் விரைவில் கொண்டுவர நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

ஐ.ஒ.சி. நிறுவனத்துக்கு அவர்கள் கேட்பது போன்று விலையை அதிகரிப்பதற்கு அதிகாரம் உண்டு. ஆனால், அரசாங்கமும் அதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கும். விலையை அதிகரிக்கக் கூடாது என்பது அரசாங்கத்தின் வேண்டுகோள் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a comment