நீதிமன்ற உத்தரவை மதிக்கின்றோம்: ஆர்ப்பாட்டம் இடம்பெறும் – நாமல்

375 0

நாம் நீதிமன்ற உத்தரவை மதிப்பதுடன் திட்டமிட்டபடி எமது ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஹம்பாந்தோட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காலி நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

தங்காலை – கால்டன் இல்லத்தின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்ததோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிணைந்த எதிரணியினரால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a comment