சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது மாத ஊதியம் சரியாக வழங்கப்படாத காரணத்தால் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சரியான தேதியில் ஊதியம் வழங்குவது இல்லை.
தீபாவளி பண்டிகை வர இருக்கும் இந்த சூழ்நிலையில் செப்டம்பர் மாத ஊதியத்தை இன்னும் வழங்காமல் இழுத்தடிப்பதால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.