ஆதார் எண் – செல்போன் இணைத்தால் மாதம் 12 முறை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: தெற்கு ரெயில்வே

2363 0

ஐ.ஆர்.சி.டி.சி.-யில் தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை இணைப்பதின் மூலம், இனி மாதத்துக்கு 12 முறை ‘ஆன்-லைன்’ மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) மூலம் ரெயில் டிக்கெட்டுகளை பயணிகள் முன்பதிவு செய்து வந்தனர். ஒரு மாதத்துக்கு 6 தடவை மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்பதே இதுவரையில் நடைமுறையில் இருந்து வந்தது.

இந்தநிலையில் தெற்கு ரெயில்வே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஐ.ஆர்.சி.டி.சி.-யில் தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை இணைப்பதின் மூலம், இனி மாதத்துக்கு 12 முறை ‘ஆன்-லைன்’ மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் முன்பதிவு கோரும் பயணிகள் விவர பட்டியலில் இடம்பெறும் ஒருவரின் ஆதார் எண்ணும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட முறைகளை கையாளுபவர்களுக்கு மாதம் 12 முறை டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை பொருந்தும். மற்றவர்கள் மாதம் 6 முறை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும்.

மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment