விராட் கோஹ்லி இந்திய அணியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக வர முடியும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிர்வரும் 15 மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
குறித்த காலப்பகுதியில் இந்திய அணி முக்கியமான சில போட்டிகளில் விளையாட உள்ளது.
தென்னாபிரிக்கா செல்லும்போது இந்திய அணி சவால்களை சந்திக்கும்.
ஆனால் தென்னாபிரிக்கா மண்ணில் தற்போதைய இந்திய அணி சிறப்பாக செயற்படும் என சவுரவ் கங்குலி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விராட் கோஹ்லி சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.