ரஷ்ய வான் தாக்குதலில் அல் நுஸ்ரா அமைப்பின் தலைவர் படுகாயம்

255 0

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் செயற்பட்டுவரும் அல் நுஸ்ரா பிரிவினைவாத தீவிரவாத மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அல் நுஸ்ரா அமைப்பின் தலைவரான அபு மொகமட் அல் ஜூலானி (Abu Mohammad al-Julani) பாரிய காயங்களுக்கு உட்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யா பாதுகாப்பு அமைச்சினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

தாக்குதலுக்கு இலக்கான அவர் கோமா எனப்படும் ஆழ்மயக்க நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்லிப் மாகாணத்தில் ரஷ்ய வான் படைகள் கடந்த மூன்றாம் திகதி தொடர்ச்சியாக  தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்த தாக்குதலில் அல் நுஸ்ரா அமைப்பின் ஏழு முக்கிய தலைவர்கள் உட்பட்ட 49 பேர் மரணித்தனர்.

நுஸ்ரா அமைப்பின் தலைவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்தத் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a comment