ஆளுநரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள மாகாண சபைகளின் பொதுச் சொத்துகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பது ஆளுநர் மற்றும் செயலாளர்களின் கடப்பாடு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கெஃபே அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.
ஆளுநரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள கிழக்கு சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் வசம் 32 வாகனங்கள் உள்ளன.
அவற்றுள் பெரும்பாலானவை முன்னாள் முதலமைச்சர்கள் அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கெஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது