பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகளுடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை ஆதரவினை வழங்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா முதலான நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களை சந்தித்தபோதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் தமது அரசியலமைப்பின் பின்னணி குறித்து விபரித்துள்ளனர்.
அத்துடன் அங்கு நடைபெறும் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் முறைமைகள் குறித்தும் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகள் எதிரநோக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு விளக்கமளித்துள்ளனர்.
குறிப்பாக யூகோஸ்லேவியன் யுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்கம் குறித்தும் விரிவாக விளக்கமளித்துள்ளனர்.
இதன்போது விரைவில் பொஸ்னியா – இலங்கை நாடாளுமன்ற நட்புக் குழுவொன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் என்றும் வெளிவவிகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார்.