அதி நவீன வாகனத்தில் வந்த நால்வர் பிச்சை எடுத்த சம்பவம் குருவிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.
அதிநவீன வாகத்தில் குருவிட்ட நகரத்திற்கு வந்த 4 பேர், அந்த வாகத்தை வீதி ஓரத்தில் நிறுத்திவிட்டு பேருந்து ஒன்றில் ஏறி பிச்சை எடுத்துள்ளனர்.
பேருந்தில் ஏறியவர்கள் “எங்களை குறித்த தவறாக நினைக்க வேண்டாம். நாங்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் அல்ல. பெரிய வர்த்தகர்கள். கதிர்காமத்தில் நிறைவேற்ற வேண்டி நேரத்திக்கடன் ஒன்று உள்ளது.
அதற்காக நாம் பணம் சேர்க்க வேண்டும். உங்களால் முடிந்த அளவில் எங்களுக்கு உதவுமாறு கேட்டு கொள்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களை பார்த்த மக்கள் வர்த்தகர்கள் என்றே நம்பியுள்ளனர். எப்படியிருப்பினும் சில வினாடிகளுக்கு அனைவரிடமும் பணம் சேகரித்து தங்கள் வாகனங்களுக்குள் போட்டு கொண்டுள்ளனர்.
அவ்வாறே ஒவ்வொரு பேருந்தாக சென்று இவ்வாறு முடிந்த அளவு பணத்தை சேகரித்துள்ளனர். இந்த 4 பேருக்குள் ஒருவரை அடையாளம் கண்ட கிராம மக்கள் உறுதி செய்து கொள்வதற்காக அவரிடம் சில கேள்விகளை கேட்டுள்ளனர். அவரிடம் சென்று “தம்பி நீங்கள் எப்படி வர்த்தகராக மாறினீர்கள்” எனக் கேட்டுள்ளனர்.
பதற்றமடைந்த இளைஞன் மக்கள் கூட்டத்திற்கு இடையே சென்று அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதன் போது ஏனைய மூவரும் வாகனத்துடன் அவ்விடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இளைஞர்கள் பல மோசடிகளுக்கு தொடர்புப்பட்டுள்ளவர்கள் எனவும் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நவீன பிச்சை எடுக்கும் முறை இதுவெனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.