யாழில் விவசாய கிணறுகள், குளங்கள், வாய்கால்களை புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு

274 0
யாழ் மாவட்டத்தின் பல விவசாய கிணறுகள், குளங்கள், வாய்கால்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கான நிதியினை மத்திய அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது.
மழை காலம் ஆரம்பமாக இருப்பதன் காரணமாக இவ்வேலைத்திட்டத்தினை  துரிதப்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில்  அதிகாரிகள் மற்றும் புனரமைப்பு செய்யப்படவுள்ள குளங்கள் அமைந்துள்ள பகுதி கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மத்திய அரசாங்கத்தினால் புனரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை திரும்பிச் செல்லவிடாது துரித கதியில் பணிகளை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

Leave a comment