நிதிச் சலவை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நிதிச் சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளித்தலை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையிலான கட்டளைகளை விரிவுபடுத்துவதற்காக தற்போது உள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்குமாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.