ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையங்களை பதிவு செய்வதில் மாற்றம்

383 0

ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையங்களை பதிவு செய்வது சம்பந்தமான விதிமுறைகளை திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார். 

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது சுகாதார அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு வர்த்தகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையங்களை பதிவு செய்வதில் சிக்கல் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கின்ற விதிமுறைகளை மாற்றியமைத்து, மருந்து தயாரிப்பு நிலையங்களை 05 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவு செய்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பிக்குமாறு இங்கு கருத்துரைத்த அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

தற்போது 1961ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டமே நடைமுறையில் இருப்பதாகவும், அதில் மாற்றங்கள் வேண்டும் எனவும் அமைச்சர் இங்கு கூறியுள்ளார்.

Leave a comment