யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பிரிவிற்கு உள்பட்ட பகுதியில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 38 கஞ்சா தொடர்பான வழக்குகளும் . குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டோர் கடந்த மாதம் 302 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டின் சிவில் நிலமை தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் செயலாளர் நா.வேதநாயகன் தலமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பிரிவிற்கு உள்பட்ட பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிசார் செயல்பட்ட வண்ணமே உள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 38 கஞ்சா தொடர்பான வழக்குகள் நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டோர் கடந்த மாதம் 302 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பிரிவிற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 26 பேர் வாள் வெட்டுக்களுடன் தொடர்பு பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேநேரம் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது என்பது பொலிசாரினால் மட்டும் முடியாத விடயம் சகலரும் ஒருங்கிணைந்தே செயல்பட வேண்டும். என்றார்.