மாகாண சபை தேர்தல் திருத்தத்தின் மூலம் தமது நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக செயலமர்வில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அமைய, தொகுதி மீள்நிர்ணயத்துக்கான குழு நியமிப்பானது, தமது கட்சியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.