மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுகளை விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் சிற்றுண்டி சாலையை நடத்திச் சென்ற ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு கல்பிட்டி நீதவான், 22 ஆயிரம் ருபா அபராதம் விதித்துள்ளார்.
சுத்தமான உணவுடன் இறைச்சி வகைகளை சேர்த்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தமை, மற்றும் பல்வேறு குறைப்பாடுகள் தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.