கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப் பரீட்சை பிற்போடப்பட்டது

10310 0

கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப் பரீட்சை 28ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் அப்பல்கலைக் கழகத்தின் 3ஆம் வருட கலை கலாசார பீட மாணவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவிருந்த வெளிவாரிப் பட்டப் பரீட்சைகள் யாவும் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இதுபற்றி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.எல். ஜவ்பர் சாதிக் அறிவித்துள்ளார்.

மீள் பரீட்சைகளுக்கான நேர அட்டவணைகளை கிழக்குப் பல்கலைக்கழக  www.cedec.esn.ac.lk  என்ற இணையத்தளத்தில் தேர்வு நாடிகள் பார்வையிடலாம் என்றும் பதிவாளரால் விடுக்கப்பட்டுள்ள பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment