3 1/2 கோடி ரூபாய் பெறுமதியான கஜ முத்துக்களுடன் இருவர் கைது
கஜமுத்து எனப்படும் யானையின் தந்தத்தில் இருந்து கிடைக்கும் முத்துக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 கஜ முத்துக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட முத்துக்களின் பெறுமதி சுமார் மூன்றரை கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மிரிஸ்வத்த பிரதேசத்தில் இன்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்தேகநபர்கள் இருவரும் குறித்த யானை தந்த முத்துக்களை விற்பனை செய்ய முற்பட்டிருந்த வேளையில் , உளவாளியொருவரின் உதவியுடன் இவர்களை கைது செய்தாக வனத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.