மாகாண எல்லை நிர்ணயத்துக்கு 5 பேர் கொண்ட குழு நியமனம்

279 0

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைவாக இச்சபை அமைக்கப்பட்டுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இக்குழுவின் தலைவராக கே. தவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக, பேராசிரியர் எஸ்.எச். ஹிஸ்புல்லா, கலாநிதி அனிலா டயஸ் பண்டார, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் பி.எம். சிறிவர்தன மற்றும் பேராசிரியர் சங்கரவிஜய சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

Leave a comment