எரிபொருட்களை உள்ளுரில் விற்பனை செய்வதற்கு சீனா விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படக் கூடும் என்ற காரணத்தினால் இவ்வாறு அரசாங்கம் சீனாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.
எரிபொருட்களை விற்பனை செய்வதற்கு சீன நிறுவனமொன்று கோரிக்கை விடுத்திருந்தது. எரிபொருட்களை சுத்திகரித்து இலங்கையின் உள்ளுர் சந்தையில் விற்பனை செய்வதே அந்த நிறுவனத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. இலங்கையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், இந்திய எரிபொருள் நிறுவனமும் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது