தென்பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளையிட்டு வந்த மூவரை அக்குரஸ்ஸ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாத்தறை, கம்புறுப்பிட்டிய, அக்குரஸ்ஸ, வெலிகம, காலி ஆகிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் கைதுசெய்யப்பட்ட மூவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மோட்டர் சைக்கிளொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த மூவரும் அஹங்கம பிரசேத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இளைஞர்கள் எனவும் அவர்கள் 25 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் அக்குரஸ்ஸ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.