பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டீ.வீ.சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி இருவரும் ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புர துறைமுகத்திற்கு நுழையும் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடல் மற்றும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்துதல் ஆகியசெயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஹம்பாத்தோட்டையில் மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தள விமானநிலையம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஒப்படைப்பதற்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நாளை ஹம்பாத்தோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தியதையடுத்தே குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.