இரண்டாவது இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 19 வயது யுவதி மரணித்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கு ஊடக சந்திப்பில் வைத்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று இதனைத் தெரிவித்தார்.
இந்த இருதய சத்திர சிகிச்சையின் போது தவறு இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவரும் பட்சத்தில் குறித்த தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த தினத்தில் கண்டி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது, குறித்த யுவதி மரணித்தார்.
இந்த நிலையில், தமது மகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குறித்த யுவதியின் தந்தை சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.