தொகுதி மீள்நிர்ணயத்துக்கான குழு நியமிப்பு

565 0

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அமைய, தொகுதி மீள்நிர்ணயத்துக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற விவகாரங்களுக்கான அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதன்படி கே.தவலிங்கம் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த குழுவில், பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லா, கலாநிதி அனில டயஸ் பண்டார, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் பி.எம்.சிறிவர்தன மற்றும் பேராசிரியர் சங்கரவிஜய சந்திரன் ஆகியோர் உள்ளவாங்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து பேர் கொண்ட குழு மாகாணசபைகளில் புதிய தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment