பப்புவா நியுகினி – மானஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்கொலை செய்துக் கொண்ட ஈழ ஏதிலியின் பூதவுடலை இலங்கைக்கு அனுப்புவது குறித்து கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் விளக்கமளித்துள்ளது.
ராஜிவ் ராஜேந்திரன் என்ற குறித்த ஏதிலி கடந்த திங்கட்கிழமை முகாமில் வைத்துதற்கொலை செய்துக் கொண்டார்.
அவரவு பூதவுடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அவரது குடும்பத்தாரிடம் 7000 டொலர்கள் கட்டணம் செலுத்த கோரியதாக அவுஸ்திரேலியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எனினும் அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், அவுஸ்திரேலிய அரசாங்கம் அவ்வாறு நிதி கோரவில்லை என்றும் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்த மரணம் பப்புவா நியுகினியிலேயே இடம்பெற்றுள்ளமையால், அவரது பூதவுடலை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் அந்த நாட்டின் அரசாங்கமே தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.