5ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை நீர்கொழும்பு மிணுவாங்கொட ஹரிசந்திர மகாவித்தியாலய மாணவன் தினுக கிரிஷான் குமார பெற்றுள்ளார்.
இவர் 198 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தை இருவர் பகிர்ந்துள்ளனர்.
கனேமுல்லையைச் சேர்ந்த இந்துமினி ஜயரத்ன மற்றும் துல்கிரியவைச் சேர்ந்த சஞ்சனா நயனஜித் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இவர்கள் தலா 197 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
கடவத்தை கிரிலவெல கனிஸ்ட பாடசாலையைச் சேர்ந்த சகாஸ் தர்மரத்ன 196 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.
இதனிடையே, மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் குறித்த தகவல்களும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 155 வெட்டுப்புள்ளிகளும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 154 புள்ளிகளும், மன்னார் மாவட்டத்திற்கு 153 புள்ளிகளும், வவுனியா மாவட்டத்திற்கு 154 புள்ளிகளும், முல்லைத்தீவு மாவட்;டத்திற்கு 154 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 154 புள்ளிகளும், அம்பாறை மாவட்டத்திற்கு 154 புள்ளிகளும், திருகோணமலை மாவட்டத்திற்கு 152 புள்ளிகளும், கொழும்பு மாவட்டத்திற்கு 156 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக அறிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா 154, கண்டி 156, பதுளை 153, இரத்தினபுரி 154 என தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுபுள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பரீட்சை பெறுபேறுகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில், இந்த முறை 3 லட்சத்து 56ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் திருந்தங்கள் குறித்து எதிர்வரும் 20 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்கள் அறிவித்துள்ளது.