அவுஸ்திரேலியா அரசாங்கத்துக்கு அவுஸ்திரேலிய அகதிகள் சபை வலியுறுத்தல்

367 0

பப்புவா நியுகினி நாட்டுக்கு சொந்தமான மானஸ் தீவில் தற்கொலை செய்துக் கொண்ட ஈழ அகதியின் உடலத்தை இலங்கைக்கு இலவசமாக அனுப்ப வேண்டும் என்று, அவுஸ்திரேலிய அகதிகள் சபை வலியுறுத்தியுள்ளது.

மானஸ்தீவில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்த ரஜீவ் ராஜேந்திரன் என்ற 32 வயதான அகதி, கடந்த திங்கட்கிழமை தற்கொலை செய்துக் கொண்டார்.

அவர், நீண்டகாலம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை மற்றும் அவரது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தமை போன்ற காரணங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது குடும்பத்தாரிடம் 6000 தொடக்கம் 7000 டொலர் வரையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கோரிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது செலவில் அவரது உடலத்தை அனுப்ப வேண்டும் என்று அவுஸ்திரேலிய அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.

Leave a comment