2018 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் க்ரீன் கார்ட் எனப்படும் பல்வகைமை விஸா சீட்டிழுப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த சீட்டிழுப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்காக விண்ணப்பதாரிகள் ஒருமுறை மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
பலமுறை விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் உறுதிசெய்யப்பட்ட இலக்கத்தை விண்ணப்பதாரிகள் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.
தாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்களா என்பதை ஆராய்வதற்கு அது தேவைப்படும் என அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இணையத்தள விண்ணப்பம் முற்றிலும் இலவசமானது.
மறைமுக கட்டணங்கள் எதுவும் அறவிடப்பட மாட்டாது என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கும், சமர்ப்பிப்பதற்கும் மூன்றாம் தரப்பொன்றின் உதவி அவசியம் இல்லை.
www.dvlottery.state.gov என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் ஊடாக சீட்டிழுப்புக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.