வாழைச்சேனை மீனவருக்கு ஒரே நாளில் அடித்த அதிஷ்டம்!!

342 0

வாழைச்சேனை, பேத்தாழை பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் ஒருவருக்கு 2,500 கிலோகிராமிற்கு அதிக நிறையுள்ள சுறாமீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக கடலில் தங்கியிருந்து இன்று(4) கரை திரும்பிய பேத்தாழையை சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளரான எஸ்.அகிலகுமார் என்பவருக்கே இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது.

மேலும், குறித்த மீன்களின் இன்றைய நிலையில் முதற்கட்ட விலை பத்து இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் அதிகளவு பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது.கடந்த வாரம் வாழைச்சேனை பகுதியை சேர்ந்த இன்னுமொரு மீனவருக்கும் பத்து இலட்சம் பெறுமதியான சுறாமீன்கள் பிடிப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment