விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மீனவர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்களாம் புலம்புகின்றார் அன்ரனி ஜெகநாதன்

457 0

antony-600x399தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடபுலத்தில் இருந்த கடற்றொழிலாளர்கள் முன்னெறுவதற்கு உரிய சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. குறிப்பாக நவீன வசதிகள் கடற்றொழிலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தமிழ் கடற்றொழிலாளர்கள் பின்தங்கியிருக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை பேரவை உப தலைவர் அன்ரனி ஜெகநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் கடற்றொழிலாளர்களின் குறைநிறைகள் தொடர்பாக கேட்டறியும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த நடமுறைகள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- வடபுலத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
இவர்கள் நவீன வசதிகள் உட்புகுத்தப்படாத காரணத்தினாலேயே அவர்கள் இந்த பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றார்கள்.
குறிப்பாப தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கிருந்த கடற்றொழிலாளர்களுக்கு நவீன வசதிகள் கொண்டு கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
இதனால் இங்குள்ள மீனவர்கள் பின்தங்கியே உள்ளார்கள். அவர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட கடற்றொழில் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றார்.