1333 வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் தஞ்சம் – அமைச்சர் மகிந்த சமரசிங்க!

306 0

சிறிலங்காவில் உள்ள ஐ.நா உயர் ஸ்தானிகரத்தின் பொறுப்பில் அகதிகளாகவும், அரசியல் தஞ்சம் கோருவோராகவும் 1இ333 வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகம் எனவும், பாகிஸ்தானியர்கள் 1037பேர் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அந்த 1,333 பேரில் 728 பேர் அகதிகளாக தங்கியிருப்பதாகவும் ஏனைய 605 பேரும் அரசியல் புகலிடம் கோரி தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் தஞ்சம் கோரியவர்கள் தொடர்பாக ஐநா அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும், புகலிடம் வழங்க அனுமதித்தால் அவர்கள் வேறு நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும், புகலிடம் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் அவர்களது நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரவித்துள்ளார்.

Leave a comment