முதியவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

275 0
முதியவர்கள் தொடர்பில் குறிப்பாக வயது முதிர்ந்த பெண்கள் தொடர்பில் சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியம் இதனை வலியுறுத்தியதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது
2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் வாழும் மக்கள் தொகையில் 25 லட்சம் பேர் அதாவது 12.4 சதவீதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் குடித்தொகையானது வேகமாக அதிகரித்து வருவதாக புள்ளிவிபரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1980 முதல் 2012 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் குடித்தொகை 6.6 சதவீதத்திலிருந்து 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பிறப்பின் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்களின் ஆயுட்காலமானது முறையே 72 மற்றும் 79 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆண்களைவிட பெண்கள் 6 ஆண்டுகள் அதிகமாக வாழ்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வயது முதிர்ந்த பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment