தெரணியகல இறப்பர் காட்டில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் திகதி அவிசாவளை திக்வளை பகுதியை வசிப்பிடமாக கொண்ட எரபுதுபொல முதியன்சலாகே மோனிகா ரசிகா குமாரி கணதிலக்க என்ற கர்பிணி பெண்னை இறப்பர் காட்டிற்கு அழைத்து சென்ற அவரது கணவர் மேலும் ஒரு நண்பர்களுடன் இணைந்து கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
சுமார் 4 வருடங்கள் ஒருவரை ஒருவர் விரும்பிய பின்னர் ரசிக்கா அவரது காதலரான சந்திர குமாரவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
திருமணத்தின் பின்னர் கர்பமடைந்த குறித்த பெண்ணிடமிருந்து விலகி செல்ல முயற்சித்ததோடு பிறிதொரு பெண்ணுடன் காதல் வயப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்ரகுமார புதிய காதலியுடன் இணைந்து வாழ்வதற்காக தனது மனைவியை கொலை செய்ய நண்பர்களுடன் இணைந்து திட்டமிட்டுள்ளார்.
திட்டமிட்டதற்கு அமைய எசல பெரஹெர பார்க்க செல்லவுள்ளதாக கூறி மனைவியை அழைத்து சென்றுள்ளனர்.
கணவரை நம்பிய மனைவி சிறிதும் தயக்கமின்றி குழந்தையை வயிற்றில் சுமந்துக்கொண்டு கணவருடன் சென்றுள்ளார்.
அவிசாவளை இறப்பர் காட்டினை அண்மித்ததும் பேருந்திலிருந்து மனைவியுடன் இறங்கிய சந்ரகுமார காட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.
குறித்த காட்டு பகுதிக்குள் செல்லும் போது நண்பர்கள் இருவரும் இணைந்துக்கொண்டனர்.
சிறிது தூரம் சென்றதும் எதிர்பாரத சந்தர்ப்பத்தில் மனைவியை தாக்கி மயக்கமுறச் செய்து கழுத்தினை வெட்டி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர்.கொலை செய்வதற்கு நண்பர்களுக்கு ஒரு போத்தல் சாரயமும் 5 ஆயிரம் ரூபாய் பணமுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மறுதினம் காலை பெண் ஒருவர் குறித்த கர்பிணி தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அவதானித்து காவல் துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
பெண்ணின் சடலத்தினை மீட்டெடுத்த பொலிசார் அவரின் கணவரான சந்திரகுமாரவை இனம் கண்டு விசாரணை செய்துள்ளனர்.
இரண்டு தினங்களாகவே தனது மனைவியை காணவில்லை என சந்ரகுமார சிறிதும் சலனமின்றி சாட்சிமளித்ததாகவும் பொலிசார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து ரசிகா தனது கணவரினால் கொலை செய்யப்பட்ட விடயத்தினை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.வாளியான அவரது கணவர் சந்தரகுமார, மற்றும் கொலைக்கு உடந்தையாக செயற்பட்ட மூவருக்கும் மரண தண்டனை விதித்து சப்ரகமுவ மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனினும் பிரதான குற்றவாளி சந்ரகுமார கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரசிகாவை கொலை செய்து அவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட குற்றத்திற்காக ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபா அபராதமும் 3 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதோடு அபராதம் செலுத்தப்படாத பட்சத்தில் மெலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அதிகரிக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் முதலாவது சந்தேக நபர் சந்தரகுமார ஆவார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் முறையே ராஜா என அழைக்கப்படும் கோவிந்தசாமி, மற்றும் மாரிமுத்து பரமேஸ் கண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.