சார்க் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு

248 0

சார்க் அமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் 8ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (04) முற்பகல் கொழும்பில் ஆரம்பமாகியது.

இதன்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சார்க் நாடுகளின் சபாநாயகர்களுடன் இணைந்து மாநாட்டை ஆரம்பித்து வைத்தனர்.

‘சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு, பேண்தகு அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைந்துகொள்வதற்கு தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து செயற்படுவதற்கான மன்றம்’ என்ற கருப்பொருளின் கீழ் இன்று ஆரம்பமாகும் மாநாடு எதிர்வரும் 06ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும்.

இதேவேளை, சார்க் அமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் 8ஆவது மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைசர் எம்.எச்ஏ.ஹலீமினால் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட விசேட அதிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment