கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர இன்று ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இங்கு வந்த அவர் முதலில் யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள மாநாட்டு மண்;டபத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழிலாளர்களை சந்தித்து அவர்களுடைய குறை நிறைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இச் சந்திப்பில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் ரெஜினோலட் குரே, வடமாகாண சபை பேரவையின் உப தலைவர் அன்ரனி ஜெகநாதன், வடமகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.மாவட்ட் அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.