அறிவாலயத்தில் இன்று மு.க.ஸ்டாலின் நிருபரிடம் கூறியதாவது:-100 நாள் வேலை திட்ட பயனாளிகளை கரூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைத்து செல்வது கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க.வினர் லம்பாடி அரசியல் பேச அரசு விழாவை பயன்படுத்துகிறார்கள்.
கரூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விட சொல்லி தனியார் பஸ்களில் மாணவ-மாணவிகளை அழைத்து செல்கிறார்கள். இதற்கு தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் போகவும் தயாராக உள்ளோம்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் மற்றும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது ஆகிய வழக்குகள் கோர்ட்டில் உள்ளதால் அதுபற்றி கருத்து தெரிவிக்க இயலாது.இவ்வாறு அவர் கூறினார்.