இலங்கையில் 10 நாடுகளைச் சேர்ந்த 1333 வெளிநாட்டு அகதிகள் தற்பொழுது உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகள் தொடர்பான காரியாலயத்தின் பொறுப்பில் இவர்கள் உள்ளதாவும், படிப்படியாக இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களில் 605 அரசியல் புகழிடக் கோரிக்கையாளர்களும் உள்ளனர்.
அகதிகளாக 728 பேர் உள்ளனர். இவர்களில் 533 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், 113 பேர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள், 7 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள், 8 பேர் மாலைத்தீவைச் சேர்ந்தவர்கள், 35 பேர் மியன்மாரைச் சேர்ந்தவர்கள், 10 பேர் பலஸ்தீனியர்கள், 14 பேர் சிரியாவைச் சேர்ந்தவர்கள், சோமாளியர் ஒருவர், 6 யெமன் வாசிகள், டியுனிஷியாவைச் சேர்ந்த ஒருவர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தரவுகள் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சினால், மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி கிடைக்கப் பெற்றவை எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.