இலங்கையின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் கூட இடம்பெறாதவாறான சவால்களை இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முகம்கொடுத்து வருவதாக இலங்கை ராமங்ஞ்ஞா பீட மகாநாயக்கர் நாபான பிரேமசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
குறித்த மகாநாயக்கருடன் இணைந்து அப்பீடத்தின் சங்க சபையைச் சேர்ந்த நான்கு பேருடைய ஒப்பத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
பிக்குகள் பல்வேறு பெயர்களைக் கொண்டு அரசியல்வாதிகளினால் நிந்தனை செய்யப்படுவது, தூற்றப்படுவது கவலைக்குரிய ஒன்றாகும்.
இனத்தைப் பாதுகாக்கப் பாடுபடும் பிக்குகள் தற்பொழுது காவியுடை போர்த்தியவர்கள், பைத்தியக்காரர்கள், பொரம்போக்குகள், காவியுடை தரித்த முதலாளிமார், காவியுடை போர்த்திய திருடர்கள் போன்ற வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு தூற்றப்படுவதாகவும் இவர்கள் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.