தனியார் துறையிடம் இருந்து மின்சாரம் பெற அரசாங்கம் தீர்மானம்

574 0

9 பில்லியன் ரூபாவிற்கு தனியார் துறையிடம் இருந்து விரைவாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சினால் இதற்கான யோசனை நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக இவ்வாறு தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரம் பெறப்பட்ட போதும், தொடர்ந்தும் மின்சாரம் வழங்க குறித்த நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இந்தநிலையிலேயே 9 பில்லியன் ரூபாய்க்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மின்சாரத்துறை பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a comment