நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸவிற்கு பின்னர் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிர்காலம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெற்றிப் பெறுவதற்கு தனிமனிதன் அன்றி கட்சியே வலுப்பெற்றிருக்க வேண்டும் எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.