துப்பாக்கிகள் மீட்கப்பட்ட வாகனம் – ஜீ பி எஸ் தொழிநுட்பம் உதவியுடன் விசாரணை

423 0

கம்பஹா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டமை குறித்து ஜீ பி எஸ் தொழிநுட்பம் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒற்றிற்குள்ளிருந்து ரீ 56 ரக துப்பாக்கிகள் மூன்று நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்கள் மீட்கப்பட்ட வாகனமானது பன்னிப்பிட்டிய பகுதியில் இயங்கும் கூலிக்கு வாகனங்களை கொடுக்கும் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

மேலும் வாகனத்தின் இலக்கத்தகடுகள் மாற்றப்பட்டிருந்ததோடு, அதன் உரிமையாளர் யக்கல பகுதியில் வசிக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment