இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் அருகிலுள்ள பேளுக்குறியிச்சியில் தாய் ஒருவர் அவரது 7 மாத குழந்தையுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 3 தினங்களாக சுகயீனமுற்றிருந்த தாய் மற்றும் அவரது 7 மாத ஆண் குழந்த சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளனர்.
இதன்போது வைத்தியர் குறித்த இருவருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வீடு திரும்பிய தாய் தமது குழந்தையுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.