ஓக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாக இடம்பெறுவதை முன்னிட்டு, அதன் இலட்சினை
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று (03) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் தலைவர் கலாநிதி டபிள்யு.ஏ.அபேசிங்கவினால் இந்த இலட்சினை ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.
தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.சுனில் மற்றும் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.