சில் துணி தீர்ப்பால் ஆட்டம் கண்ட பஷில் மனு

295 0

கொழும்பு மேல் நீதி மன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கும் தனக்கு எதிரான வழக்கை வேறொரு நீதிபதிக்கு மாற்ற உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும நிதியை பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட 50 இலட்சம் பஞ்சாங்கங்கள் அச்சிடப்பட்டமை குறித்து தனக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செயய்ப்பட்டுள்ளதாக தனது மனுவில் பஷில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த வழக்கு தற்போது நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அண்மையில் சில் துணி விவகாரத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் அரச அதிகாரிகள் அழுத்தங்களுக்கு மத்தியில் செயற்பட்டு வந்ததாக கருத்து வெளியிட்ட நீதிபதி கிஹானிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது, எனவே தனக்கு எதிரான வழக்கை வேறோரு நீதிபதியிடம் மாற்ற உத்தரவிடுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார் பஷில்

குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர் வரும் 26ஆம் திகதி இவ் விடயம் தொடர்பாக தகவல் அளிக்குமாறு சட்டமா அதிபருக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a comment