ரோஹிங்யா முஸ்லிம்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்

304 0

அகதிகள் தொடர்பிலான சர்வதேச சமவாயத்தை இலங்கை ஏற்றுகொள்ளாத காரணத்தினால் அகதிகளை இலங்கை ஏற்றுகொள்ள வேண்டிய தேவை இல்லை. 

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் விரைவில் இலங்கையில் இருந்து வெளியேற்றப்படவுள்ளனர் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். துஸ்பிரயோக சம்பவம் குறித்த குற்றம் நிரூபிக்கபடும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

Leave a comment