இலங்கை மீதான போர்க்குற்றங்களை ஏற்றுக்கொண்டு வெளிவிவகார அமைச்சு தேசத்துரோக செயலை செய்துள்ளதாகவும் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படும் எனவும் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் தனிப்பட்ட கோரிக்கைகளை திணிக்கவே முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.