இலங்கையில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களால் பிரித்தானியாவுக்கு செல்ல முயற்சித்தாக 4 இலங்கையர்கள் சாட்சியம்

21887 0
இலங்கையில் போரின் பின்னர் ஏற்பட்டுள்ள பட்டினி மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சியே தாம் பிரித்தானியாவுக்கு செல்ல முனைந்ததாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பாயின் சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாக பிரித்தானியாவுக்கு போலி ஆவணங்களுடன் செல்ல முயற்சித்தபோது 4 இலங்கையர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
பிரித்தானியா பிரஜைகளின் கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு செல்ல முற்பட்ட போது, கடந்த மார்ச் 10ஆம் திகதி இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்கள் தொடர்பான விசாரணையின் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் குறித்த நால்வரும், இலங்கையில் போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் வறுமைக் காரணமாகவே பிரித்தானியாவுக்கு செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிநாடு செல்ல அவர்கள் தலா 20 லட்சம் ரூபாய்களை முகவர்களுக்கு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment