இலங்கையில் இருந்து தங்கப் பாளங்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், இலங்கையர் ஒருவர் இந்தியாவின் விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் வைத்து கைதாகியுள்ளார்.
முன்னதாக அவர் கொக்கேய்ன் வில்லைகளை கடத்திச் செல்வதாகவே சந்தேகிக்கப்பட்டது.
எனினும் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் தங்கப் பாளங்களையே கடத்திச் சென்றமை உறுதியாகியுள்ளது.
அவரிடம் இருந்து 800 கிராம் அளவில் தங்கப் பாளங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுங்க அதிகாரிகள் அவர் குறித்த விபரங்களை வெளியிடவில்லை.