அத்தியாவசிய பழுது பார்த்தல் பணிகள் காரணமாக கம்பளை பிரதேசத்திற்கு இன்றைய தினம் (03) 22 மணித்தியால நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர்விநியோக மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை 22 மணித்தியாலங்களில் நீர்விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கம்பளை கண்டி வீதி, கஹட்டபிட்டிய, போத்தலாபிட்டிய, இலங்கவத்த பாதை, இல்லவத்துர, பானபொக்க மாவத்தை, பல்லேவலை, இஹலவெல, கருபுரய, ஒருவில் வத்தை, நுவரஎலிய வீதி, மவுண்ட் டெம்பல், சக்கரன் தொட்டுவ, கடுகன்னாவை பாதை, உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.